ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, கோவிந்தசேரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி வாலாஜா அரசு மகளிர் மேல்நிலைப் 'பள்ளியில் 9ம் வகுப்பு முடித்துவிட்டு, வரும் கல்வியாண்டில் 10ம் வகுப்பு செல்ல இருந்தார்.
தேர்வு முடிந்து விடுமுறையில் சிறுமி வீட்டில் இருந்த நிலையில், அரக்கோணம் தாலுகா மேலோரி கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் கடந்த 25ம் தேதியன்று நெமிலி தாலுகா மகேந்திரவாடி கிராமம் மது வாத்தம்மன் கோயிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்றிந்த மாவட்ட சமூக அலுவலர் பிரேமலதா சம்பந்தப்பட்ட சிறுமியை மீட்டதுடன், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என அவரது பெற்றோருக்கு எடுத்துரைத்தார். பின்னர், சிறுமியின் பெற்றோர் தனது மகளை படிக்க வைப்பதாக உறுதியளித்ததும் அவர்களிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.