பாணாவரம் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால், பொறுப்பு இன்ஸ்பெக்டர்களாக இக்காவல் நிலையத்தில் பலர் பணியாற்றி சென்றனர். இதனால் புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி, அங்கிருந்து மாற்றப்பட்டு, பாணாவரம் காவல் நிலைய ன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். புதிதாக பொறுப் பேற்ற இன்ஸ் பெக்டர் லட்சுமிபதிக்கு, சப்-இன்ஸ் பெக்டர்கள் பார்த்திபன், மேசிட், ராஜா மற்றும் போலீசார், பொது மக்கள் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி பாணாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.