குறள் : 1125

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

மு.வ உரை :

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.

கலைஞர் உரை :

ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு

சாலமன் பாப்பையா உரை :

ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

Kural 1125

Ulluvan Manyaan Marappin Marappariyen
Ollamark Kannaal Kunam

Explanation :

If I had forgotten her who has bright battling eyes I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).


Horoscope Today: Astrological prediction for May 29 2023

இன்றைய ராசிப்பலன் - 28.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



29-05-2023, வைகாசி 15, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 11.49 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.29 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். அக்னி நட்சத்திரம் முடிவு காலை 8.18. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 29.05.2023 | Today rasi palan - 29.05.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியம் கைகூடும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். 

சிம்மம்

இன்று குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்பு அமையும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். 

துலாம்

இன்று வீட்டின் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். 

தனுசு

இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 08.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.

கும்பம்

இன்று நீங்கள் சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு காலை 08.55 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். உடல்நிலையில் கவனம் தேவை. அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026