குறள் : 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
மு.வ உரை :
அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
கலைஞர் உரை :
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை
சாலமன் பாப்பையா உரை :
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.
Kural 1120
Anichchamum Annaththin Thooviyum Maadhar
Atikku Nerunjip Pazham
Explanation :
The anicham and the feathers of the swan are to the feet of females like the fruit of the (thorny) Nerunji.
Horoscope Today: Astrological prediction for May 24, 2023
இன்றைய ராசிப்பலன் - 24.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
24-05-2023, வைகாசி 10, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.01 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.06 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 24.05.2023 | Today rasi palan - 24.05.2023
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
துலாம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 8.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது, உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
தனுசு
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 8.27 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல்& வாங்கலில் சற்று கவனம் தேவை.
மகரம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.