குறள் : 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
மு.வ உரை :
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால் நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
கலைஞர் உரை :
நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்
சாலமன் பாப்பையா உரை :
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.
Kural 1119
Malaranna Kannaal Mukamoththi Yaayin
Palarkaanath Thondral Madhi
Explanation :
O moon if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers do not appear so as to be seen by all.
Horoscope Today: Astrological prediction for May 23, 2023
இன்றைய ராசிப்பலன் - 23.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
23-05-2023, வைகாசி 09, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி இரவு 12.58 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.38 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல் 12.38 வரை பின்பு சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 23.05.2023 | Today rasi palan - 23.05.2023
மேஷம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மன சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.
சிம்மம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
துலாம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
தனுசு
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.
மகரம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப் பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
கும்பம்
இன்று மன உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மீனம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.