குறள் : 1112

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.


மு.வ உரை :

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

கலைஞர் உரை :

மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது

சாலமன் பாப்பையா உரை :

நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)


Kural 1112

Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan

Palarkaanum Poovokkum Endru

Explanation :

O my soul fancying that flowers which are seen by many can resemble her eyes you become confused at the sight of them.


Horoscope Today: Astrological prediction for May 16, 2023


இன்றைய ராசிப்பலன் - 16.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


16-05-2023, வைகாசி 02, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.15 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் காலை 08.15 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 16.05.2023 | Today rasi palan - 16.05.2023

மேஷம்

இன்று உற்றார் உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையா சொத்துக்கள் வழியில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்சினை தீரும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது, பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நெருக்கடிகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.

மீனம்

இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026