குறள் : 1110

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

மு.வ உரை :

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல் நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

கலைஞர் உரை :

மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது

சாலமன் பாப்பையா உரை :

நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.


Kural 1110

Aridhoru Ariyaamai Kantatraal Kaamam

Seridhorum Seyizhai Maattu

Explanation :

As (one’s) ignorance is discovered the more one learns so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).


Horoscope Today: Astrological prediction for May 14, 2023


இன்றைய ராசிப்பலன் - 14.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

14-05-2023, சித்திரை 31, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.46 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 10.16 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.


இன்றைய ராசிப்பலன் - 14.05.2023 | Today rasi palan - 14.05.2023

மேஷம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் மனநிம்மதி குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். 

சிம்மம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெரியவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.

துலாம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நெருங்கியவர்கள் வகையில் தேவையில்லாத நெருக்கடிகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மகரம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் உறவினர்கள் உதவியால் சற்று குறையும்.

கும்பம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026