குறள் : 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
மு.வ உரை :
ஊடுதல் ஊடலை உணர்ந்து விடுதல் அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.
கலைஞர் உரை :
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்
சாலமன் பாப்பையா உரை :
படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!
Kural 1109
Ootal Unardhal Punardhal Ivaikaamam
Kootiyaar Petra Payan
Explanation :
Love quarrel reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.
Horoscope Today: Astrological prediction for May 13, 2023
இன்றைய ராசிப்பலன் - 13.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
13-05-2023, சித்திரை 30, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.51 வரை பின்பு நவமி பின்இரவு 04.43 வரை பின்பு தேய்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.35 வரை பின்பு சதயம். சித்தயோகம் பகல் 11.35 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 13.05.2023 | Today rasi palan - 13.05.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்று உற்றார் உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுப செய்தி கிட்டும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். வேலையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் உண்டாகும். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்பு தேடி வரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் லாபம் அடையலாம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை சற்று குறையும்.
துலாம்
இன்று பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும் மனஉளைச்சலும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
விருச்சிகம்
இன்று பயணங்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.