குறள் : 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
மு.வ உரை :
காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல் ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.
கலைஞர் உரை :
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்
சாலமன் பாப்பையா உரை :
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.
Kural 1108
Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku
Explanation :
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.
Horoscope Today: Astrological prediction for May 12, 2023
இன்றைய ராசிப்பலன் - 12.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
12-05-2023, சித்திரை 29, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 09.07 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் பகல் 01.03 வரை பின்பு அவிட்டம். மரணயோகம் பகல் 01.03 வரை பின்பு சித்தயோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 12.05.2023 | Today rasi palan - 12.05.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
ரிஷபம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்ல வேண்டும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கன்னி
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
விருச்சிகம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உறவினர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி எளிதில் கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்வுகள் நடைபெறும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
மீனம்
இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.