குறள் : 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
மு.வ உரை :
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.
கலைஞர் உரை :
விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன
சாலமன் பாப்பையா உரை :
நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.
Kural 1105
Vetta Pozhudhin Avaiyavai Polume
Thottaar Kadhuppinaal Thol
Explanation :
The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).
Horoscope Today: Astrological prediction for May 09, 2023
இன்றைய ராசிப்பலன் - 09.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
09-05-2023, சித்திரை 26, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.08 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மூலம் நட்சத்திரம் மாலை 05.45 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் மாலை 05.45 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 09.05.2023 | Today rasi palan - 09.05.2023
மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எடுக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோக ரீதியான முயற்சிக்கு அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. நெருங்கியவர்களின் உதவியுடன் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம். சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.