குறள் : 1104

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்


மு.வ உரை :

நீங்கினால் சுடுகின்றது அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

கலைஞர் உரை :

நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்

சாலமன் பாப்பையா உரை :

தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?


Kural 1104

Neengin Theruum Kurukungaal Thannennum

Theeyaantup Petraal Ival?

Explanation :

From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?


Horoscope Today: Astrological prediction for May 08, 2023


இன்றைய ராசிப்பலன் - 08.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

08-05-2023, சித்திரை 25, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 06.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் இரவு 07.10 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.


இன்றைய ராசிப்பலன் - 08.05.2023 | Today rasi palan - 08.05.2023

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைக்கவும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிடைக்கும். வருமானம் பெருகும். பொருளாதார நிலை உயரும்.

கடகம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று விலகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரீதியான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.

தனுசு

இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் சிறு சிறு மனசங்கடங்கள் எற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.

மகரம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலேயே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் சிறு சிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026