ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு கொள்ளை மேட்டு தெருவை சேர்ந்த முத்து. கடந்த 4 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சமையல் செய்வதற்காக முத்து மனைவி சூர்யா, காஸ் சிலிண்டரை ஆன் செய்தபோது காஸ் திடீரென வெடித்து தீ பிடித்தது.
சூர்யா கூச்சலிட்ட தில் அக்கம் பக்கத்தினர். கலவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டு வீடு தீப்பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இதனால் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மண்டல துணை தாசில்தார் தேவராஜு, வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் தீனா, ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
பின்னர், மதிவாணன் உத்தரவின்பேரில் முத்து வின் குடும்பத்தினரை தங்குவதற்காக பேரூராட்சிக்கு உட்பட்ட தங்கும் விடுதியில் தங்க வைத்து இரவு உணவும், வேஷ்டி, புடவை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்ககினார்.