லாலாப்பேட்டை ஊராட்சி எல்லையை மறு வரையறை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை முத்துக்கடையில் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் விஸ்வராஜ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், லாலாப்பேட்டை ஊராட்சி எல்லை மறு வரையறை மற்றும் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி கடந்த 22ம் தேதி முகுந்தராயபுரம் ஊராட்சியில் கள ஆய்வுக்கு சென்ற ஆர்டிஐ சமூக ஆர்வலரை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும். லாலாப்பேட்டை ஊராட்சி எல்லையை மறுவரையறை செய்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
ஆர்டிஐ ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், பாமக நிர்வாகிகள், லாலாப்பேட்டை பொதுமக்கள் மற்றும் கிருஷ்ணர், துரியோதனன், பீமன் வேடம் அணிந்து நாடக கலைஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.