10th Class Result How to Check

தமிழகத்தில் பத்து, பதினொராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியாகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வோடு பொதுத் தேர்வு முடிவடைந்தது.

இதன் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மாணவர்கள் https://tnresults.nic.in/, https://www.dge.tn.nic.in/ ஆகிய லிங்க்குகள் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த லிங்க்குகளில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இல்லையெனில் பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறுஞ்செய்தியாக மதிப்பெண்கள் அனுப்பப்படும்.

அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களுக்கும் சென்று கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தனித் தோ்வா்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பித்த போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி 3 வாரம் நடைபெற்ற பதினொராம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி முடிவு பெற்றது. 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது. மேற்குறிப்பிட்டவாறு 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.