ஆற்காடு அருகே உள்ள வணக்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு வாலாஜாவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களது பெற்றோர்கள் நிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளனர். பின்னர் மாலை வந்து பார்த்தபோது இளம் பெண் காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
எனவே, திமிரி போலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.