👉 1777ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தலைச்சிறந்த கணித வல்லுநர், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் பிறந்தார்.
👉 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
சர்வதேச ஜாஸ் தினம்
🎷 சர்வதேச ஜாஸ் தினம் ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2011ஆம் ஆண்டு அறிவித்தது. ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது.
🎷 ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ், பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது.
நினைவு நாள் :-
ஹிட்லர்
👉 இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனுமான அடால்ஃப் ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற இடத்தில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்தார்.
👉 இவர் மிக சிறந்த ஓவியர். உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். 1934ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.
👉 பெயரைக் கேட்டாலே உலகமே நடுங்கும் ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என்று அழைக்கப்படும் இவர் தனது 56வது வயதில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
தாதாசாஹேப் பால்கே
🎬 இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.
🎬 பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.
🎬 1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
🎬 தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
🎬 வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் (1944) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
இன்றைய தின நிகழ்வுகள்
313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது.
1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது.
1513 – ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் எட்டாம் என்றியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார்.
1636 – எண்பதாண்டுப் போர்: இடச்சுக் குடியரசுப் படைகள் எசுப்பானியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர்.
1789 – நியூயோர்க்கின் வால் ஸ்ட்ரீட், பெடரல் மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து சியார்ச் வாசிங்டன் அமெரிக்காவின் 1வது குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
1803 – லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
1812 – லூசியானா அமெரிக்காவின் 18வது மாநிலமாக இணைந்தது.
1838 – நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1870 – இலங்கை, புறக்கோட்டையில் முசுலிம்களின் கலவரம் இடம்பெற்றது.[1]
1897 – ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.
1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
1937 – பிலிப்பீன்சு பொதுநலவாயம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் செருமனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை சோவியத் செம்படை விடுவித்தது.
1948 – கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அமெரிக்க நாடுகள் அமைப்பு உருவானது.
1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது.
1961 – கே-19 என்ற முதலாவது சோவியத் அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1975 – வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
1980 – யூலியானா முடிதுறந்ததை அடுத்து பீட்ரிக்சு நெதர்லாந்தின் அரசியாக முடிசூடினார்.
1980 – இலண்டனில் ஈரானியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தெற்கு ஈரானியப் போராளிகள் அங்கிருந்த பலரை பனயக் கைதிகளாகப் பிடித்தனர்.
1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1982 – இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1993 – உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
1999 – ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2006 – ஆப்கானித்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2008 – உருசியாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2009 – நெதர்லாந்தில் அரசி பீட்ரிக்சு மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
2013 – நெதர்லாந்தில் பீட்ரிக்சு முடிதுறந்ததை அடுத்து, வில்லியம்-அலெக்சாந்தர் மன்னராக முடிசூடினார்.
இன்றைய தின பிறப்புகள்
1662 – இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (இ. 1694)
1777 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1855)
1870 – தாதாசாகெப் பால்கே, இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1944)
1902 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 1998)
1909 – யூலியானா, நெதர்லாந்து அரசி (இ. 2004)
1916 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. 2001)
1920 – கெர்டா லெர்னர், ஆத்திரிய யூத-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 2013)
1934 – கந்தையா குணரத்தினம், இலங்கை இயற்பியலாளர், கல்வியாளர் (இ. 2015)
1935 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் எழுத்தாளர், இலக்கியவாதி (இ. 2014)
1943 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
1947 – மாலினி பொன்சேகா, இலங்கை அரசியல்வாதி, நடிகை
1949 – அந்தோனியோ குத்தேரசு, போர்த்துகலின் 114வது பிரதமர்
1959 – இசுட்டீவன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்
1964 – டோனி பெர்னாண்டஸ், மலேசிய-இந்தியத் தொழிலதிபர்
1979 – ஹரிணி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி
1981 – குணால் நாயர், பிரித்தானிய-இந்திய நடிகர்
இன்றைய தின இறப்புகள்
1030 – கசினியின் மகுமூது (பி. 971)
1735 – ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர், படைத்துறைத் தலைவர் (பி. 1669)
1883 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (பி. 1832)
1945 – இட்லர், செருமனியின் அரசுத்தலைவர் (பி. 1889)
1945 – இவா பிரான், அடால்ப் இட்லரின் மனைவி
1945 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர், சைவசித்தாந்த, சட்ட அறிஞர், உரையாசிரியர் (பி. 1888)
1961 – லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து மதகுரு (பி. 1896)
1987 – சிதம்பர பாரதி, தமிழக அரசியல்வாதி (பி. 1905)
1989 – செர்சோ லியோனி, இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1929)
2001 – நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1924)
2011 – தோர்ச்யீ காண்டு, அருணாச்சலப் பிரதேசத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1955)
இன்றைய தின சிறப்பு நாள்
வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள் (வியட்நாம்)
ஆசிரியர் நாள் (பரகுவை)
தந்தையர் தினம் (செருமனி)
குழந்தைகள் நாள் (மெக்சிக்கோ)
மாவீரர் நாள் (பாக்கித்தான்)