👉 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.
👉 1606ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முக்கிய தினம் :-
சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்
🚀 மனித விண்வெளி பயணத்திற்கான சர்வதேச தினத்தை உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தினமாக (International Day of Human Space Flight) அனுசரிக்கப்படுகிறது.
🚀 இத்தினம் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி, ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளி பயணத்தை நினைவுகூறுவதற்காக தான்.
🚀 ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்
👫 உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் தினமாக வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் (International Day for Street Children) ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
👫 இத்தினம் மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள வீதியோர சிறுவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராஜ்ஜியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இத்தினத்தை கடைபிடிக்கின்றனர்.
பிறந்த நாள் :-
டாம் கிளான்ஸி
✍ உலகப் புகழ்பெற்ற உளவுத்துறை சார்ந்த நூல்களை படைத்த டாம் கிளான்ஸி (Tom Clancy) 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலம் பால்ட்டிமோரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தாமஸ் லியோ கிளான்ஸி.
✍ இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால், பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, அவற்றை பற்றிய பல புத்தகங்களை படித்தார்.
✍ இவர் ஓய்வு நேரங்களில் நாவல்கள் எழுதினார். இவரது 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்' என்ற நாவல் 1982ஆம் ஆண்டு வெளியானது. முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது.
✍ உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களை கொண்டு சாதனை படைத்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி தனது 66வது வயதில் (2013) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
240 – முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரது தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார்.
467 – அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
1167 – சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார்.
1204 – நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர்.
1606 – ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
1633 – ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
1831 – இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிரஃப்டன் தொங்கு பாலத்தில் போர் வீரர்கள் அனிவகுத்து சென்றதில் பாலம் உடைந்தது.
1832 – இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.[1]
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க-அமெரிக்கப் படையினரும் கூட்டமைப்புப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டமைப்பு இராணுவத்திடம் வீழ்ந்தது.
1877 – ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் மாநிலத்தை தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தது.
1927 – சாங்காயில் சங் கை செக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனையை அறிவித்தார்.
1927 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ரொக்சுஸ்பிரிங்சு என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் நகரின் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. 72 பேர் உயிரிழந்தனர்.
1937 – சேர் பிராங்க் விட்டில் வானூர்தி ஒன்றை பறக்கவிடுவதற்கான முதலாவது தாரைப் பொறியை இங்கிலாந்து, ரக்பி நகரத்தில் சோதித்தார்.
1945 – அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் இறந்தார். துணைத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அரசுத்தலைவரானார்.
1955 – யோனாசு சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
1961 – பனிப்போர்: விண்வெளிப் போட்டி: சோவியத் விண்ணோடி யூரி ககாரின் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
1963 – சோவியத் அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பல் கே-33 பின்லாந்து சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதியது.
1970 – சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
1980 – பிரேசிலில் போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 58 பேரில் 55 பேர் உயிரிழந்தனர்.[2]
1980 – லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.
1981 – முதலாவது விண்ணோடம் கொலம்பியா ஏவப்பட்டது.
1983 – பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
2002 – எருசலேம் சந்தை ஒன்றில் பெண் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 104 பேர் காயமடைந்தனர்.
2007 – இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
2009 – சிம்பாப்வே தனது டாலர் நாணயத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது.
2014 – சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் தீ பரவியதில் 16 பேர் உயிரிழந்தனர், 2,000 வீடுகள் அழிந்தன, 10,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1484 – மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527)
1851 – வால்டேர் மவுண்டர், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1928)
1852 – லிண்டெமன், செருமானிய கணிதவியலாளர் (இ. 1939)
1854 – சே. ப. நரசிம்மலு நாயுடு, தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர் (இ. 1922)
1884 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1951)
1904 – அண்ணல் தங்கோ, திராவிட இயக்க எழுத்தாளர் (இ. 1974)
1932 – லக்சுமன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் அசியல்வாதி (இ. 2005)
1934 – என். எஸ். வி. சித்தன், தமிழக அரசியல்வாதி
1942 – யாக்கோபு சூமா, தென்னாப்பிரிக்காவின் 4வது அரசுத்தலைவர்
1943 – சுமித்ரா மகஜன், இந்திய அரசியல்வாதி
1947 – டாம் கிளான்சி, அமெரிக்க வரலாற்றாளர் (இ. 2013)
1954 – சப்தர் ஆசுமி, இந்திய மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், செயற்பாட்டாளர். (இ. 1989)
இன்றைய தின இறப்புகள்
352 – முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)
1817 – சார்லசு மெசியர், பிரெஞ்சு வானியலாளர் (பி. 1730)
1927 – ஜோசேபே முஸ்காதி, இத்தாலிய மருத்துவர், அறிவியல் ஆய்வாளர் (பி. 1880)
1937 – செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப், சோவியத் வானியலாளர் (பி. 1848)
1945 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (பி. 1882)
1946 – வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி. 1869)
1966 – வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1874)
1993 – நெ. து. சுந்தரவடிவேலு, தமிழக தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1911)
2005 – வைக்கம் சந்திரசேகரன் நாயர், மலையாள எழுத்தாளர் (பி. 1920)
2006 – ராஜ்குமார், கன்னட திரைப்பட நடிகர் (பி. 1929)
2008 – மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம், இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)
இன்றைய தின சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் (பொலிவியா)
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்