School student dies after being hit by a van
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கவரை தெருைவ சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 9), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவனது நண்பரான பிரசன்னாவுடன் (11) சைக்கிளில் காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வேன் திடீரென அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் ஹேமச்சந்திரனை பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
மேலும் பிரசன்னா வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.