5% incentive if property tax is paid by 30th in Kaveripakkam and Thakolam municipalities
காவேரிப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகளில் வரும் 30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உளளாட்சிகளிலும் ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை அல்லது அதிகபட்சமாக ₹5000 வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 2023- 24ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5,000/- வரை ஊக்கத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை பேரூராட்சி செயல் அலுவலர்கள் சரவணன் (காவேரிப்பாக்கம்), மாதேஸ்வரன் (தக்கோலம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.