வறுவல், பொரியல் இவற்றில் காரம் அதிகமாகி விட்டால், ரஸ்கை பொடித்து தூவினால், காரம் குறைந்து சுவைகூடும். வற்றல் குழம்பு, காரக்குழம்புகளில் காரம் கூடிவிட்டால், தக்காளியை அரைத்து சேர்த்தால் போதும். சரியாகிவிடும்.
குழம்பு, ரசம் இவற்றில் காரம் கூடினால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைவதோடு, சுவையும் கூடும். ரசத்தில் காரம் கூடி இருந்தால், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் போதும். 

இட்லி மிளகாய் பொடியில் காரம் அதிகமாக இருந்தால், பொட்டுக்கடலை மாவு கலந்தால் காரம் குறையும். சாம்பார் காரமாக இருந்தால், நீரில் சிறிது கடலை மாவு அல்லது பச்சரிசி மாவை கரைத்து, கொதிக்கவிட்டால் காரம் குறையும். மசாலாவில் காரம் கூடிவிட்டால் சிறிது தேங்காய் பால் சேர்க்கலாம்.