பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தனித்திறன்களை அறிந்து, குழந்தைகளின் திறமையை வளர்க்க முன்வர வேண்டும்.
உங்கள் பிள்ளை காகிதம், தரை மற்றும் சுவர்களில் வரைய விரும்பினால், அவர்கள் வடிவமைப்பு அல்லது கட்டிடக்கலை போன்ற படைப்புத் துறையில் ஆர்வமாக இருக்கலாம்.
தொடர்ந்து வாசிக்க விரும்புகிறார்கள் எனில், இலக்கியம் அல்லது எழுத்து திறனில் ஆர்வம் இருக்கலாம். தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவுகளிடையே தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தினால் வருங்காலத்தில் மேற்பார்வை யராகும் திறன் உள்ளதென அறியலாம்.
ஒரு சூழ்நிலையை தாங்களாகவே கையாளத் தெரிந்த குழந்தைகள், ஊடகம், தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல், விற்பனை, பத்திரிகை அல்லது மேலாண்மை ஆகியவற்றில் நன்றாகச் செயல் படுவார்கள் என்று அர்த்தம்