குறள் : 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
மு.வ உரை :
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும் பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
கலைஞர் உரை :
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்
சாலமன் பாப்பையா உரை :
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.
Kural 1097
Seraaach Chirusollum Setraarpol Nokkum
Uraaarpondru Utraar Kurippu
Explanation :
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.
Horoscope Today: Astrological prediction for April 30, 2023
இன்றைய ராசிப்பலன் - 30.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
30-04-2023, சித்திரை 17, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 08.29 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மகம் நட்சத்திரம் பகல் 03.30 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 03.30 வரை பின்பு சித்தயோகம். வாசுவி ஜெயந்தி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 30.04.2023 | Today rasi palan - 30.04.2023
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும். நெருங்கியவர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மிதுனம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.
கன்னி
இன்று பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்கள் பிரச்சினைகளும் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நினைத்தது நிறைவேறும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ எதிலும் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் நேரத்தில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியுடன் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். முடிந்தவரை தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். உத்தியோக ரீதியாக பயணங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும். பொன் பொருள் சேரும்.
மீனம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் பெருமைப்படும்படி நடந்து கொள்வார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராக இருக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.