குறள் : 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
மு.வ உரை :
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல் ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
கலைஞர் உரை :
அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்
சாலமன் பாப்பையா உரை :
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.
Kural 1095
Kurikkontu Nokkaamai Allaal Orukan
Sirakkaniththaal Pola Nakum
Explanation :
She not only avoids a direct look at me but looks as it were with a half-closed eye and smiles.
Horoscope Today: Astrological prediction for April 28, 2023
இன்றைய ராசிப்பலன் - 28.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
28-04-2023, சித்திரை 15, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.02 வரை பின்பு வளர்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் காலை 09.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 28.04.2023 | Today rasi palan - 28.04.2023
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
இன்று நீங்கள் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் மாற்று கருத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று அசையும் அசையா சொத்துக்கள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். பண வரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபார ரீதியான முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். உறவினர்களிடம் பேச்சில் கவனம் தேவை.
தனுசு
இன்று உங்களுக்கு மனகுழப்பம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
மகரம்
இன்று தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பொருளாதார மேன்மையால் நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் கடின உழைப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும்.