குறள் : 1084

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.


மு.வ உரை :

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.


கலைஞர் உரை :

பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?


சாலமன் பாப்பையா உரை :

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.


Kural 1084

Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip

Pedhaikku Amarththana Kan


Explanation :

These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.



Horoscope Today: Astrological prediction for April 17, 2023


இன்றைய ராசிப்பலன் - 17.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


17-04-2023, சித்திரை 04, திங்கட்கிழமை, துவாதசி திதி பகல் 03.47 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.28 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 02.28 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.l

இன்றைய ராசிப்பலன் - 17.04.2023 | Today rasi palan - 17.04.2023

மேஷம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும். 

ரிஷபம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் மனஉறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து சென்றால் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வேலை ஆட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன்பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். சுபகாரியம் கைகூடும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் வகையில் ஒருசில அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மனநிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பயணங்களில் வெளிநபர்களின் அறிமுகம் கிட்டும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது.

கும்பம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001