குறள் : 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
மு.வ உரை :
கீழ் மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
கலைஞர் உரை :
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்
சாலமன் பாப்பையா உரை :
பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
Kural 1079
Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel
Vatukkaana Vatraakum Keezh
Explanation :
The base will bring an evil (accusation) against others as soon as he sees them (enjoying) good food and clothing.
Horoscope Today: Astrological prediction for April 12, 2023
இன்றைய ராசிப்பலன் - 12.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
12-04-2023, பங்குனி 29, புதன்கிழமை, சப்தமி திதி பின்இரவு 03.44 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. மூலம் நட்சத்திரம் பகல் 11.59 வரை பின்பு பூராடம். மரணயோகம் பகல் 11.59 வரை பின்பு அமிர்தயோகம்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 12.04.2023 | Today rasi palan - 12.04.2023
மேஷம்
இன்று நீங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உடன் வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினை குறையும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்.
கன்னி
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
துலாம்
இன்று மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் நண்பர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்கள் அறிமுகம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை மாற சற்று கூடுதல் முயற்சி தேவை. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கும்பம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.
மீனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். பொன் பொருள் சேரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001