குறள் : 1078

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.


மு.வ உரை :

அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர் கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

கலைஞர் உரை :

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்

சாலமன் பாப்பையா உரை :

இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.


Kural 1078

Sollap Payanpatuvar Saandror Karumpupol

Kollap Payanpatum Keezh

Explanation :

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean like the sugar cane only when they are tortured to death.

Horoscope Today: Astrological prediction for April 11, 2023

இன்றைய ராசிப்பலன் - 11.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

11-04-2023, பங்குனி 28, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 07.18 வரை பின்பு சஷ்டி பின்இரவு 05.40 வரை பின்பு தேய்பிறை சப்தமி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.58 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 12.58 வரை பின்பு அமிர்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 11.04.2023 | Today rasi palan - 11.04.2023

மேஷம்

இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகள் தேடி வரும். உங்கள் ராசிக்கு பகல் 12.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் உணர்ச்சிவசப் படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும் புதிய முயற்சிகளையும் மதியத்திற்கு மேல் மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கடகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.






கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001