குறள் : 1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
மு.வ உரை :
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால் அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
கலைஞர் உரை :
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்
சாலமன் பாப்பையா உரை :
தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.
Kural 1074
Akappatti Aavaaraik Kaanin Avarin
Mikappattuch Chemmaakkum Keezh
Explanation :
The base feels proud when he sees persons whose acts are meaner than his own.
Horoscope Today: Astrological prediction for April 07, 2023
இன்றைய ராசிப்பலன் - 07.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
07-04-2023, பங்குனி 24, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 10.21 வரை பின்பு தேய்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 07.04.2023 | Today rasi palan - 07.04.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடன்கள் ஓரளவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள்.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிமாற்றம், இடமாற்றம் பற்றி யோசிப்பார்கள். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
துலாம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001