பொது இடங்களில் நடைபெறும் போட்டிகளின் போதும், மேடை பேச்சாளர் பேசும்போதும், உணர்ச்சிவசப்பட்டு அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக கைத்தட்டும் பழக்கம் நம் அனைவருக்கும் உண்டு.
இப்படி கை தட்டுவதற்கு பின்பும் கூட பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் கை தட்டுதல்கூட ஒருவகை உடற்பயிற்சிதான். இதன் மூலம் ஏராளமான நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும்.
இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பகுதிகள் இயக்கப்படுகின்றன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி முழுவதும் நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
எனவே அடுத்தவரை சந்தோசப்படுத்த மட்டுமல்ல, நம் ஆரோக்கியம் காக்கவும் கைதட்டுவோம்.