Worker dies after tipper truck collides with motorcycle
வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை பொன்னைக்கு சென்று விட்டு, மீண்டும் சரவணன் என்பவருடன், மோட்டார் சைக்கிளில், ராணிப்பேட்டை நோக்கி, பொன்னை சாலையில் வந்து கொண்டிருந்தார். கொண்டகுப்பம் அருகே வரும்போது, விரைவு சாலை பணியில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணமூர்த்தி, ரத்தினகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். சரவணன் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.