அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). கூலித்தொழிலாளி.
குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த ராஜா சம்பவத்தன்று அங்குள்ள ஏரி பகுதியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.