👉 1876ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
👉 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார், கேரளாவில் பிறந்தார்.
பிறந்த நாள் :-
ஜோசப் நிசிபோர் நியெப்ஸ்
📷 உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் (Joseph Nicephore Niepce) 1765ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார்.
📷 இவர் 1825ஆம் ஆண்டு மனிதனையும், குதிரையொன்றையும் காட்டும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்தார்.
📷 இவர் 'இருட்டறை" (camera obscura) என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் விம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினார்.
📷 இவர் படங்களை வரையும்போது கைகள் உறுதியாக இல்லாததால், விம்பங்களை நிலையாக இருக்குமாறு செய்வதற்கு வேறு ஏதாவது வழியை கண்டுபிடிக்க 1793ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தார்.
📷 பிறகு 1824ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 1829ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவருடன் சேர்ந்து பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினார்.
📷 2002ஆம் ஆண்டில் இவர் 1825ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 4,50,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.
📷 ஒளிப்படவியல் துறையின் முன்னோடி ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் தனது 68வது வயதில் (1833) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
161 – உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். அவரது வளர்ப்பு மகன்கள் மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
321 – உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார்.
1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.
1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.
1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.
1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
1914 – அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.
1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.
1941 – செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.[1]
1951 – ஈரான் பிரதமர் அலி ரசுமாரா தெகுரான் பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இசுலாமிய அடிப்படைவாதிகளான பெதயான் இ-இசுலாம் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1965 – அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 600 மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
1968 – வியட்நாம் போர்: அமெரிக்க, தென் வியட்நாம் படைகள் மை தோ பகுதியில் இருந்து வியட்கொங் படைகளை வெளியேற்ற போர் நடவடிக்கையை ஆரம்பித்தன.
1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் டாக்காவில் நிகழ்த்திய தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையில், “இந்த முறை போராட்டம் நமது விடுதலைக்கானது,” என அறிவித்தார்.
1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.
1987 – தைவானிய இராணுவம் லியூ என்ற இடத்தி 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.
1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.
1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
2006 – லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் வாரணாசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் அவையின் உறுப்பினர்கள் 100% தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை வாக்களித்தது.
2007 – இந்தோனேசியாவின் யாகியகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் உயிரிழந்தனர்.
2009 – வட அயர்லாந்தில் குடியரசு இராணுவப் போராளிகள் இரண்டு பிரித்தானியப் போர்வீரர்களை சுட்டுக் கொன்று, மேலும் இருவரைக் காயப்படுத்தினர்.
இன்றைய தின பிறப்புகள்
1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833)
1792 – ஜான் எர்ழ்செல், ஆங்கிலேயக் கணிதவியலாலர், வானியலாளர் (இ. 1871)
1837 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882)
1853 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910)
1866 – கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1944)
1886 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ. 1964)
1911 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987)
1919 – எம். என். நம்பியார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)
1938 – ஆல்பெர்ட் ஃவெர்ட், பிரான்சிய இயற்பியலாளர்
1938 – டேவிட் பால்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
1944 – மைக்கேல் ரோபாஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர், மரபியலாளர்
1945 – தி. வே. சங்கரநாராயணன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
1949 – குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி
1952 – விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாளர்
1958 – ஆலன் ஏல், அமெரிக்க வானியலாளர்
1960 – பரத்வாஜ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குனர்
1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை
இன்றைய தின இறப்புகள்
203 – பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா கிறித்தவ மறைசாட்சிகள்
1274 – தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225)
1625 – ஜோஹன் பாயர், செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572)
1832 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777)
1924 – மூலம் திருநாள், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1857)
1952 – பரமஹம்ச யோகானந்தர், இந்திய குரு (பி. 1893)
1961 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887)
1969 – சம்பூர்ணாநந்தர், இந்திய அரசியல்வாதி (பி. 1891)
1982 – ஈதா பார்னி, அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1886)
1990 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897)
1993 – டோனி ஹாரிஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1916)
1999 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)
2014 – பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
2020 – க. அன்பழகன், தமிழக அரசியல்வாதி (பி. 1922)
இன்றைய தின சிறப்பு நாள்
ஆசிரியர் நாள் (அல்பேனியா)