A student of an engineering college was killed by lightning in Walajapet


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை மாருதிநகரை சேர்ந்தவர் முனிசாமி, 67. விவசாயி. அவர் மகன் விக்னேஷ்வரன், 19. 

இவர் சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் பொறியில் கல்லுாரியில் பி.டெக்., முதலாமாண்டு படித்து வந்தார்.
இன்று(17 ம் தேதி) மாலை 5:00 மணிக்கு வீட்டிலிருந்தார். அப்போது வானம் இருண்டு மழை பெய்தது.

இதனால் அருகிலுள்ள வயலுக்கு சென்று கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வீட்டுக்கு ஓட்டி வந்தார். அப்போது திடிரென மின்னல் விக்னேஷ்வரனை தாக்கியது. 

அதில் உடல் கருகி மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வாலாஜாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.