Ranipet-based teenager loses up to Rs 55 lakh in online gambling, reports to cybercrime police


ராணிப்பேட்டையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்து வருகிறார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு லிங்க் வந்தது. அதனை அவர் ஓபன் செய்ததும், டெலிகிராம் செயலிக்கு சென்றது. எதிர் முனையில் இருந்த நபர் பகுதிநேர வேலை தருவதாகவும், அதற்காக ரூ.1000 கட்டுங்கள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதனை நம்பி பணம் கட்டினார். உடனடியாக பணம் இரட்டிப்பாக வந்தது.

பின்னர் 5 நிலையை அடைந்தால், அதிக அளவில் பணம் கிடைக்கும் என சவால் கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் அவர் பதில் அளித்து பணம் சம்பாதித்தார். அடுத்தடுத்து நிலை மாறி கேள்விகள் கேட்கப்பட்டது.

பதில் தெரியாமல் பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். விட்ட பணத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து விளையாட்டுகளை விளையாடியதால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார்.

மேலும் நண்பர்களிடம் கடன் வாங்கி மீண்டும் அதே விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போதும் விளையாட்டில் தோற்று ரூ.55 லட்சம் வரை இழந்து விட்டார்.

இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.