A nurse hanged herself in a family dispute near Ranipet |
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி சத்யா(28). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல், நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த நவீன்குமார் மனைவி சத்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சத்யா, நேற்று வீட்டின் அருகே உள்ள கோயில் வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல்றிந்த சிப்காட் போலசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.