திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அணைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 47). கட்டிடம் மேஸ்திரி.
நேற்று சென்னை சென்ற அவர் இரவு ஊருக்கு வருவதற்காக வேலூர் வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு பஸ் வேலூர் கிரீன் சர்க்கிளை கடந்தது.
அப்போது அசோக்குமார் பஸ்சில் இருந்து சீக்கிரம் இறங்க வேண்டும் என்பதற்காக அவரது பையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக படிக்கட்டு அருகே வந்தார்.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வளைவில் பஸ் திரும்பியது.
அப்போது எதிர்பாராத விதமாக அசோக்குமார் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.