Mechanic injured in a car collision near Arcot Bypass road bus stand

ஆற்காட்டை அடுத்த திமிரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருபவர் பாஸ்கர் (வயது 30). இவர் நேற்று காலை ஆற்காடு பைபாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு கார் அவர் மீது மோதியது. இதில் பாஸ்கர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார், பாஸ்கரின் மோட்டார்சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்று நின்றது.

படுகாயமடைந்த பாஸ்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.