Job Fair in Arignar Anna Govt. Arts & Science College for Women, Walajapet on 18th March 

வாலாஜாபேட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரியில், வரும் 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணிபேட்டை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும்

பட்ங் எங்ங்ஓஹஹ் ரா்ழ்ப்க் நஸ்ரீட்ா்ா்ப் இணைந்து, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் வேலைபெறும் நோக்கில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் சனிக்கிழமை (மாா்ச் 18) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முகாமில், 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளன.

இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை நாடுநா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்துக் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு, வேலை வாய்ப்பினை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.