குறள் : 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.


மு.வ உரை :

உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால்  அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

கலைஞர் உரை :

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்

சாலமன் பாப்பையா உரை :

பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.


Kural 1062

Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu

Ketuka Ulakiyatri Yaan

Explanation :

If the Creator of the world has decreed even begging as a means of livelihood  may he too go abegging and perish.


Horoscope Today: Astrological prediction for March 26, 2023



இன்றைய ராசிப்பலன் - 26.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

26-03-2023, பங்குனி 12, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.33 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 02.01 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். ஸ்ரீ லக்ஷ்மி பஞ்சமி. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 26.03.2023 | Today rasi palan - 26.03.2023

மேஷம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.

மிதுனம்

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப் பலன் கிட்டும். 

சிம்மம்

இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

தனுசு

இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகரம்

இன்று நீங்கள் பண நெருக்கடிகளில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001