குறள் : 1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
மு.வ உரை :
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
கலைஞர் உரை :
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்
சாலமன் பாப்பையா உரை :
ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.
Kural 1061
Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum
Iravaamai Koti Urum
Explanation :
Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing will do immense good.
Horoscope Today: Astrological prediction for March 25, 2023
இன்றைய ராசிப்பலன் - 25.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
25-03-2023, பங்குனி 11, சனிக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.23 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பரணி நட்சத்திரம் பகல் 01.18 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். மாத சதுர்த்தி- கிருத்திகை விரதம். விநாயகர்- முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 25.03.2023 | Today rasi palan - 25.03.2023
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது.
கன்னி
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
துலாம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வெளி மாநிலத்தவர் நட்பு கிட்டும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினை தீரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். முடிந்த வரை பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.