குறள் : 1057
இகழ்ந்தௌ;ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
மு.வ உரை :
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
கலைஞர் உரை :
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்
சாலமன் பாப்பையா உரை :
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.
Kural 1057
Ikazhndhellaadhu Eevaaraik Kaanin Makizhndhullam
Ullul Uvappadhu Utaiththu
Explanation :
Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.
Horoscope Today: Astrological prediction for March 21, 2023
இன்றைய ராசிப்பலன் - 21.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
21-03-2023, பங்குனி 07, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி இரவு 10.53 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.25 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 05.25 வரை பின்பு அமிர்தயோகம். சர்வ அமாவாசை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 21.03.2023 | Today rasi palan - 21.03.2023
மேஷம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களை தேடி ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு இன்று பகல் 11.57 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு பிறகு தொடங்குவது நல்லது.
சிம்மம்
இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.57 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மனநிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். வராத கடன்கள் எதிர்பாராத வகையில் வசூலாகும். வியாபார சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள், தொல்லைகள் குறையும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் உதவியுடன் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.