குறள் : 1055

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.


மு.வ உரை :

ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

கலைஞர் உரை :

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்

சாலமன் பாப்பையா உரை :

கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.


Kural 1055

Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru

Irappavar Merkol Vadhu

Explanation :

As there are in the world those that give without refusing there are (also) those that prefer to beg by simply standing before them.


Horoscope Today: Astrological prediction for March 19, 2023


இன்றைய ராசிப்பலன் - 19.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


19-03-2023, பங்குனி 05, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.07 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.04 வரை பின்பு சதயம். மரணயோகம் இரவு 10.04 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 


இன்றைய ராசிப்பலன் - 19.03.2023 | Today rasi palan - 19.03.2023

மேஷம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.

ரிஷபம்

இன்று வெளியூர் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 11.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு தடைகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும். 

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது, வெளியாட்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்குவதில் இருந்த சிக்கல்கள் விலகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சாதகப் பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

தனுசு

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி அடைய எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. போட்ட திட்டங்கள் நிறைவேற சில தடங்கல்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001