குறள் : 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
மு.வ உரை :
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால் அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
கலைஞர் உரை :
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்
சாலமன் பாப்பையா உரை :
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
Kural 1052
Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin
Explanation :
Even begging may be pleasant if what is begged for is obtained without grief (to him that begs).
Horoscope Today: Astrological prediction for March 16, 2023
இன்றைய ராசிப்பலன் - 16.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
16-03-2023, பங்குனி 02, வியாழக்கிழமை, நவமி திதி மாலை 04.40 வரை பின்பு தேய்பிறை தசமி. மூலம் நட்சத்திரம் காலை 06.24 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.46 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 16.03.2023 | Today rasi palan - 16.03.2023
மேஷம்
இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மனநிம்மதி குறையும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
கணித்தவர்
cell: 0091 7200163001. 9383763001