குறள் : 1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
மு.வ உரை :
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
கலைஞர் உரை :
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்
சாலமன் பாப்பையா உரை :
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
Kural 1046
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum
Explanation :
The words of the poor are profitless though they may be sound in thought and clear in expression.
Horoscope Today: Astrological prediction for March 10, 2023
இன்றைய ராசிப்பலன் - 10.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
10-03-2023, மாசி 26, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 09.43 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம் (வாக்கியம்). சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 10.03.2023 | Today rasi palan - 10.03.2023
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று நெருங்கியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வகையில் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் பாதியில் தடைப்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
தனுசு
இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.