குறள் : 1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.


மு.வ உரை :

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால் வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

கலைஞர் உரை :

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை

சாலமன் பாப்பையா உரை :

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.


Kural 1041

Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin

Inmaiye Innaa Thadhu

Explanation :

There is nothing that aflicts (one) like poverty.


Horoscope Today: Astrological prediction for March 05, 2023


இன்றைய ராசிப்பலன் - 05.03.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

05-03-2023, மாசி 21, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பகல் 02.07 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.30 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 09.30 வரை பின்பு மரணயோகம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 05.03.2023 | Today rasi palan - 05.03.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

கடகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

கன்னி

இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிட்டும்.

துலாம்

இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வு மந்த நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டாகும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டார நட்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001