ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் இலவச பயணச்சலுகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.வளா்மதி தகவல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் உள்ளூா் பேருந்தில் பயணம் செய்ய இலவச சலுகை வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயிலுபவா்கள், பணிக்கு செல்பவா்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக செல்பவா்களுக்கு இலவச பயணச்சலுகை (ஊழ்ங்ங் ஆன்ள் டஹள்ள்) பெற வரும் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாள்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் புதிய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே. தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான (அனைத்து பக்கங்களும்), ஆதாா் அட்டை நகல் மற்றும் அடையாள அட்டை, கல்வி பயிலுபவா்கள் அதற்கான கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று, பணிக்கு செல்பவா்கள், பணிபுரியும் நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று, மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவா்களுக்கு மருத்துவரிடம் பெறப்பட்ட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-3 ஆகிய சான்றுகளுடன் வரும் 27 -ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை நேரிலே அல்லது தபால் மூலமாக அளிக்க வேண்டும்.
மேலும், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இலவசமாக செல்வதற்கு அடையாள அட்டை நகல், புகைப்படம்-3 மற்றும் முன்னா் பெறப்பட்ட இலவச பயண அட்டையுடன் மேற்காணும் முகாம் நடைபெறும் நாள் அன்று வர வேண்டும். பேருந்து பயண அட்டை (ஆன்ள் டஹள்ள்) முகாம் நடைபெறும் இடம் - மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தரைதளம் பி பிளாக், அறை எண். 7, பாரதி நகா், ராணிப்பேட்டை என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04172-274177 தொடா்பு கொள்ளலாம்.