ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை கெலெக்டர் அலுவலகத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.