Farmer killed by electrocution
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே உள்ள சித்தாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 50) விவசாயி. இவர் நேற்று அம்மூர் அருகே உள்ள நிலத்தில் எந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் ஒயர் பட்டு ஞானராஜை மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் வழியிலேயே இறந்து விட்டதது தெரிய வந்தது. இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.