At Arakkonam railway station, due to Smoke suddenly the passengers screamed and ran in the train
மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. ரயில் அங்கிருந்து 6 நிமிட காலதாமதத்தில் புறப்பட்டு சென்றது.சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று பகல் 2.28 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. அங்கு வந்து நின்ற சில நொடியில் ரயில் இன்ஜினுக்கு பக்கத்தில் உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த எமர்ஜென்சி ஃபயர் சிலிண்டரை அந்த பெட்டியில் இருந்த பயணி ஒருவர் சிலிண்டர் மீது கை வைத்து அழுத்தியுள்ளார்.
இதில் சிலிண்டர் திறந்து கொண்டு அதிலிருந்து வெள்ளைப் புகை மொத்தம் வெளியேறியது. இதில் அந்த பெட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் சக பயணிகளிடையே ரயிலில் தீப்பிடித்து விட்டதாக நினைத்து பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பிளாட்பாரத்தில் இறங்கி கீழே நின்றனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து பார்த்ததில் சிலிண்டரை பயணி ஒருவர் தவறுதலாக கை வைத்து அழுத்தியதால் திறந்து கொண்டு அதில் இந்த கேஸ் முழுவதும் புகை மண்டலமாக வெளியேறி தெரிந்தது.
அதன் பிறகு அதிகாரிகள் தகுந்த விசாரணை நடத்தி இது தீ விபத்து அல்ல. சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியானது தெரிந்தது. அதன் பிறகு 6 நிமிட காலதாமதத்தில் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் பயணிகளுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தீ விபத்து அல்ல என்று தெரிந்த பிறகே மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் நிம்மதியுடன் அதே ரயிலில் பயணம் செய்தனர். சிலிண்டரை அழுத்தியது யார் என்று அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.