Tomorrow is a holiday for liquor shops on the occasion of Vallalar Memorial Day



ராணிப்பேட்டைமாவட்டத்தில் மாநில வாணிபகழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ் மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை (ஞாயிற்றுகிழமை) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, மூடிவைக்க வேண்டும். 

அன்றைய தினம் மதுக் கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமை தாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.