ஆற்காடு அருகே 6 மாத கர்ப்பிணி பெண் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வளவனூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கார்த்தி, விவசாயி. இவருக்கும் கல்பனா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை. வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கல்பனா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
மேலும், கல்பனா அடிக்கடி வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவருக்கு வலிப்பு வந்துள்ளது. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக
வாலாஜா அரசு மருத்துவம்னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் கல்பனா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கார்த்தி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கோட்டாட்சியர் வினோத்குமார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்.